இன்று சுமார் 1.30 மணி அளவில் TN 76 BA 2045 என்ற காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நெடுங்கோர் நயரா பெட்ரோல் பங்க் அருகில் திருச்சி டு சென்னை ரோட்டில் பிரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்கமாக
மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பயணித்த மேற்கண்ட யசோதா அவரது மகள் அணுவஞ்சனா மற்றும் விஜய் பாபு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் டிரைவர் ஜோசப், செல்வகுமார் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பந்தமாக சிறுகனூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அரசு பஸ்ஸில் இருந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் ஓடி விட்டார்கள்.