தமிழ்நாட்டில் தற்போது கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த வழக்கிஞர் ஜி.எஸ். மணி என்பவர், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது மணியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஒரு விவகாரம் அரசியல் சாசனத்துக்கு முரணாக இருந்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடமுடியாது. அவர்களது முடிவு அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.