Skip to content

மின் மோட்டார் வயர்கள் திருட்டு.. 3 பேர் கைது… பெண் தற்கொலை… திருச்சி மாவட்ட க்ரைம்..

மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ந்தேதி இவர் கட்டிடத்தில் வைத்திருந்த மின் வயர்கள் மின்மோட்டார்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அழகுமுத்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை  செய்தனர். விசாரணையில் கருமண்டபம் குளத்து கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (18), கருமண்டபம் புது தெருவைச் சேர்ந்த லக்ஷ்மன் குமார் (22) அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் வயர், மற்றும் மின் மோட்டார் களை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது..

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோடு வெங்காயம் மண்டி அருகே காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியே வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் 2 கிலோ 450 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து
வரகனேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பிரபு (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ. 5,640 பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அரியமங்கலத்தில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை

திருச்சி அரியமங்கலம் உக்கடை பள்ளிக்கூட தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் இவரது மகள் ரபியத்துல் பசிரியா (26 )இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள யூசுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு குடும்பத் தகராறு காரணமாக கணவனை விட்டு பிரிந்து கடந்த இரண்டு வருடங்களாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் வீட்டில் இருந்த பசிரியா, நேற்று மாலை தனது சேலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  செய்து வருகின்றனர்.

error: Content is protected !!