திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் சிறையில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ரௌடி சுந்தர்ராஜின் சகோதரர்களான (ரௌடிகள்) சின்னராஜ் ( 36 ),மாசிராஜா (27) அவர்களது உறவினர் மணிவண்ணன் (41) ஆகிய 3 பேரும் சர்க்கார்பாளையம் பகுதியில் தொடர்ந்து பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டபின்னர், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரவுடிகள் மீதிருந்த பயம் பயம் போய்விட்டது எனக் கூறி, அரிவாளைக் காட்டி அப்ப்போது பொதுமக்களை மிரட்டுவதாகவும், நேற்று அதுபோல பொதுயிடத்தில் நின்று அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்றனர். போலீசாரைக் கண்டதும் 3 ரவுடிகளும் தப்பி ஓட முயன்றுள்ளனர். போலீசார் விரட்டி பிடித்து கைது செய்து திருச்சி மாவட்ட 6 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….
- by Authour

Tags:3 raiders arrestedsicklesthreatening publictrichyஅச்சுறுத்திய ரவுடிகள் கைதுஅரிவாரள்திருச்சிபொதுமக்கள்