ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருச்சி ஜூலை 18 திருச்சி கருமண்டபம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 33 )இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு மனைவி காயத்ரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து நேற்று காயத்ரி வீட்டுக்குசூரிய பிரகாஷ் சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்தாகதெரிகிறது. ஆனால் அவர் நீங்கள் குடியை விட்டால் தான் வாழ வருவேன் என்று கூறிவிட்டார்.இதனால் மன உளைச்சலில் இருந்த சூரிய பிரகாஷ் காயத்ரி
விட்டின் இரும்பு கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சூரிய பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முதலியார் சத்திரம் பகுதி சேர்ந்த அலி பிச்சை மனைவி வினோதினி (வயது 30)குட்ஷெட் ரோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் மனைவி தெய்வம் (வயது 37) மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவரது மனைவி அனிதா தேவி (வயது 43) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவரிகளிடமிருந்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.