கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி பெற்ற சிறுவன் மித்ரன் குடும்பத்தினர் உலக சாதனைக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மூன்று வயது சிறுவன் 200 மீட்டர் சுற்றளவு கொண்ட ஸ்கேட்டிங் மைதானத்தை 100 முறை சுற்றி ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் முடித்து புதிய நோபல் வேர்ல்டு ரெக்கார்டு உலக சாதனை படைத்தார். ஒரு மணி நேரத்தில் மேலாக 20
கிலோமீட்டர் இடைவிடாத ஸ்கேட்டிங் செய்த மூன்று வயது சிறுவனை காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் பலூன்கலை கொண்டு உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து உலக சாதனை படைத்த மித்திரனுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனர் அரவிந்த் லட்சுமி நாராயணன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அறநிலை துறை அமைச்சர் பி. சி. இராமசாமி, அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர், புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி உலக சாதனையை கொண்டாடினர்.