செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டம்
முடிந்த பிறகு புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில் ஏராளமானூர் வருகை தந்து மரியாதை நிமித்தமாக 30 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய அளவிலான கலர் சாக்லேட் மாலையை கரூர் சட்டமன்ற உறுப்பினருக்கு செந்தில் பாலாஜிக்கு அணிவித்து வில் அம்பு வழங்கினர்.