தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நெற்பயிர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று குஜராத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 3300 டன் யூரியா உரங்கள் தஞ்சைக்கு வந்தது. பின்னர் உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு சொசைட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

