மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் பென்சனர்களும் பயனடைவார்கள். இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46% ஆக உயரும் என மத்திய இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.
