திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முருகேஷ் குமார் (20) என்பவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணி

புரிந்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அளவுக்கு அதிகமான மது போதையில்

இருசக்கர வாகனத்தின் சைலன்சரை கழட்டிவிட்டு அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர்.
இதனை முருகேஷ்குமார் தட்டி கேட்டுள்ளார் மது போதையில் இருந்த நான்கு வாலிபர்கள் சேர்ந்து

முருகேஷ் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரின் வீட்டிற்கு சென்று நாற்காலி,அடுப்பு உள்ளிட்ட பொருட்களையும் உடைத்துள்ளனர்.
அந்த நான்கு பேரும் கையில் செங்கல், இரும்பு ராடு, தடி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது. பின்னர் முருகேஷ்குமாரை பக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முருகேஷ்குமார் கொடுத்த புகாரின் பெயரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர்கள் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசேன்(18), இர்ஃபான்(21),ஆகாஷ்(21), அபிசேக்(23), உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட நபர்களை தட்டி கேட்ட வாலிபரை தாக்கி அவரின் வீட்டிற்கு சென்று பொருட்களின் சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

