Skip to content

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள R.R. நகரில் அழகு நிலையம் லேப்டாப் விற்பனை நிலையம் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் ரிதம் ஹோம் தியேட்டர் என்ற கடைக்கு சென்றவன் கடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு கடையை வலம் வந்து ஒவ்வொரு பொருளாக பார்த்து திருடியவன் மீண்டும் பெஞ்சில் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சாகவாசமாக தப்பி சென்றுள்ளான். இன்று காலை கடையை திறக்க வந்த உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. 4 கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!