Skip to content

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. ஆம்னி பேருந்து அதன் பின் வந்த கார் மற்றும் ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுத்துச் செல்லும் டெம்போ டிராவலர் வாகனம் மற்றும் லாரி என அடுத்தடுத்து மோதி வாகனம் விபத்தில் ஏற்பட்டது. ஆம்னி பேருந்தில் கோயம்புத்தூர் சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டு மீண்டும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர் திடீரென்னு பிரேக் பிடித்துள்ளார் இதனால் எதிர்பாரதமாக பின்னாடி வந்த கார் மற்றும் ஏடிஎம் வாகனம், லாரி என அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தோடு போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த பக்தர்கள் மற்றும் 10 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. பெரியளவு காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!