Skip to content

40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை, கடலூர், திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இதனையடுத்து மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி.யாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!