Skip to content

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து வீட்டின் வெளிய வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சுப்பிரமணி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பீரோவை சோதனை செய்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இத் திருடு குறித்து விசாரணை மேற்கொண்டனர்

இந்த நிலையில் இன்று கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் கைரேகை நிபுணர்கள் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து மோப்பநாய் மியாவை வரவழைத்து வரவழைத்து திருட்டு சம்பவ நடைபெற்ற வீட்டில் முகர்ந்து கொண்டு சில கிலோ மீட்டர் தூரம் குற்றவாளியை தேடி ஓடிச் சென்று நின்றது.

மேலும் போலீசார் குற்றவாளியை மிகத் தீவுமாக தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் ஆசிரியர்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 40 சவரன் தங்க நகை திருடி சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!