Skip to content

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதை அடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைத்திட வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி உர நிறுவனங்களிடமிருந்து தேவையான உரங்களை ரயில் மூலம் வரவழைத்து விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான யூரியா உரம் சீனாவில் இருந்து கப்பல் மூலம்

இறக்குமதி செய்யப்பட்டு மத்திய அரசு உர நிறுவனமான இந்தியன் பொட்டாஸ் லிமிடெட் நிறுவனம் வாயிலாக ஆந்திராவில் உள்ள கங்காபுரம் துறைமுகத்துக்கு வந்தது.

தற்போது அந்த உரங்கள் 50 கிலோ கொண்ட மூட்டைகளாக பிரிக்கப்பட்டு அங்கிருந்து 21 ரயில் வேகன்களில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது இந்த உரங்களை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தஞ்சை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களுக்கு வேளாண்மை துறையினர் அனுப்பி வைக்கின்றனர்

தஞ்சை மாவட்டத்திற்கு 1340 டன் யூரியாவும் அதேபோல் கும்பகோணம் ரயில் நிலையத்தில் 3017 டன் யூரியா உரம் இறக்கப்பட்டு வருகிறது

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே யூரியா உரம் 6984 டன் டிஏபி உரங்களும் டிஏபி 1593 டன், பொட்டாஷ் 1985டன், காம்ப்ளக்ஸ் 4023 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 1441 டன் ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மற்றும் தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் தேவையான யூரியா உரத்தினை வாங்கி பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்த பயன்படலாம் என தஞ்சை மாவட்ட வேளாண்மை (தரக்கட்டுப்பாடு) உதவி இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!