தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.
அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.
தஞ்சை தெற்கு வீதியில் தி நடராஜா சில்க்ஸ்), K.R. பிரிண்டர்ஸ் மற்றும் சுருத்திகா பேன்ஸி ஸ்டோர் அடுத்தடுத்து உள்ளன.
தி நடராஜா சில்க்ஸ் ஜவுளிக்கடையின் மாடி வழியாக கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கள்ளாவில் இருந்த பணத்தை திருடி விட்டு மீண்டும் மாடி வழியாக சென்று அடுத்து உள்ள கே.ஆர்.பிரிண்டர்ஸ் இதனை அடுத்து உள்ள சுருதிகா பேன்ஸி ஆகிய கடைகளில் மாடி வழியாக இறங்கி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்
தகவல் அறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர் சோதனை நடத்தினர். கொள்ளையர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுள்ளனர். மூன்று கடைகளிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

