திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் மெயின்ரோட்டில் வாடகை கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் தர்மராஜ் (76). இவர் பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், சம்பவத்தன்று தனது கடையின் பின்பகுதியை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கட்டிட உரிமையாளர்களான சகிலாபேகம் (65), ஆரிப்கான் (70), அம்ஜத்கான் (40) ஆகி யோர் திருடி சென்றதாக கூறி இருந்தார். இப்புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
