தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சம்பா அறுவடையை தொடர்ந்து கோடைக்காலங்களில் விவசாயிகள் எள்ளு சாகுபடி செய்திருந்தனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால்
திருவையாறு, புனவாசல்,
விளாங்குடி, பருத்திக்குடி,
உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த
500 ஏக்கர் எள்ளு பயிர் மழை மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னம் 2 வாரம் சென்றால் எள்ளு அறுவடை செய்துவிடலாம் என விவசாயிகள் கருதி இருந்த நிலையில், பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மிதக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில், தற்போது பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் விவசாயிள் கவலையடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.