மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் மரு.த.ராஜலிங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் 500 உடனடியாக மூடப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை மக்கள் சக்தி இயக்கம் மனமார வரவேற்கிறது.
படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் செயல்பாட்டிற்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. பூரண மதுவிலக்கு என்ற நிலைப்பாட்டை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என்பதே மக்கள் சக்தி இயக்க விருப்பமாகும்.
அதேநேரத்தில் போலிமது மற்றும் கள்ளச்சாராயம் பெருகி விடாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மதுவின் கோரப்பிடியிலிருந்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றும் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.