Skip to content

5 மணி நேரமாக மாணவர் – ஆசிரியருக்கு பரிசு – கேடயம்.. கரூரில் VSB அசத்தல்..

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல தலைமையில் மண்மங்கலம், அட்லஸ் திருமண மண்டபத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள், மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாணாக்கர்களை பங்கேற்க செய்த உடற்கல்வி ஆசியர்கள் மற்றும் மாவட்ட மாநில

அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் பணிலும் மாணாக்கர்களின் எதிர்காலத்ததை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், எனக்கு ஒரு மகிழ்ச்சிக்குரிய நாளாக, திருநாளாக நாம் வாழ்க்கையில் எல்லா வகையிலும் சந்தோஷப்படக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. அதற்கு காரணம் இங்கே அரங்கத்தில் அமர்ந்திருக்கக்கூடிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்கள். 100% தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர் பெருமக்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை கணித்து அதற்கான நிதிகளை கொடுத்து அந்த நிதிகள் மூலம் அந்த துறைகளை வளர்த்து அதற்கான பெருமைகளை சேர்க்கக்கூடிய ஒரு அரசாக திராவிட மாடல் அரசை வழிநடத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைப் கல்வியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உயர்த்தி உள்ளதை நாம் ஒரு கணம் நினைத்து பார்த்திட வேண்டும்.

எனக்கு இந்த அரங்கத்தில் உங்களோடு சேர்ந்தது இன்னும் ஒரு மகிழ்ச்சி. ஏனென்றால் உங்களைப் போல நானும் ஒரு அரசு பள்ளியில் படித்த மாணவன். அந்த வகையில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை இந்த நேரத்தில் அன்போடு நான் உங்களிடத்திலே பகிர்ந்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாரும் சிந்திக்காத ஒரு மகத்தான திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற ஒரு சிறப்பு வாய்ந்த திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான திட்டமாக, உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய திட்டமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்ற மாநிலங்களில் அந்தந்த நாடுகளில் செயல்படுத்துவதை விட உலக நாடுகள் அறிந்து செயல்படுத்தக்கூடிய அளவிற்கு பல முன்னோடி திட்டஙங்களான, முதலமைச்சர் இல்லம் தேடி கல்வித் திட்டம், என்னும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்கள் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சருடைய பொற்கால ஆட்சியில் நம்முடைய மாவட்டத்திற்கு ஒரு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தந்து பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.

தரகம்பட்டியில் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்தை கொடுத்து அந்த கட்டிடத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, மாணவர் செல்வங்களுடைய பயன்பாடு குறிப்பாக நம்முடைய கரூர் மாவட்டத்தில் 67 அரசு ஆரம்ப நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 113 வகுப்பறை கட்டிடங்கள் ரூ.23 கோடி மதிப்பீட்டிலும், 74 பள்ளிகளுக்கு ரூ 2.5 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடங்கள். 14 பள்ளிகளுக்கு 86 சமையலறை கட்டிடங்கள். 12 பள்ளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் சுற்றுச் சுவர்கள் 69 பள்ளிகளில் பயிலும் 22,831 மாணவ மாணவிகளுக்கு ரூ. 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 493 ஸ்மார்ட் வகுப்புகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இப்படி தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் கல்வியினுடைய தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு சிறப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் மற்ற மாவட்டங்களை விட கல்வியில் சிறந்த மாவட்டம் நம்முடைய கரூர் மாவட்டத்தை
உயர்த்துவதற்கு அரும்பணியாற்றுகின்ற மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் பெருமக்கள். ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றியை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் சமச்சீர் கல்வியை கொண்டுவரப்பட்டன. அதேபோல பள்ளியில் காலை உணவோடு சேர்ந்து முட்டைகளை தந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இங்க இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவரும் சரி நானும் சரி தயாராக மாணாக்கர்களுக்கு உதவ இருக்கின்றோம். நிச்சயமாக அனைத்து பணிகளுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு தெலிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு தேவையான வினா விடை வங்கி புத்தகங்களை தயார் செய்து அவர்களை தேர்வுக்கு தயாராகக்கூடிய வகையில் அதை வழங்கி, உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளோம். அதோடு மற்றுமில்லாமல் டி.என்.பி.எஸ்.சி போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக கூடியவர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் பயிற்சிகளை வழங்கி அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வது என உங்களோடு இணைந்து நாமும் அவர்களது வாழ்வில் விளக்கேற்ற கூடிய வகையில் சிறப்பான பணிகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.

எனவே இங்கே வந்திருக்கக்கூடிய மாணவ மாணவிகள் உங்கள் 7:33 னோடத்தில் சொல்ஜிங்கள். நிச்சயம் உங்கள் சகோதர செல்வது எந்த +இறந் செய்து தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொண்டு. இது வெறும் வார்த்தைக்காக மேடையில் சொல்லப்படுகின்ற வார்த்தை அல்ல நிச்சயமாக உணர்வுபூர்வமாக சொல்லக்கூடிய வார்த்தை ஆகையால் கல்வி என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது, இன்றியமையாதது அதை தரக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையை இந்தியாவில் தமிழ்நாட்டை தலைநகராக உயர்த்தியிருக்கக்கூடிய வழிகாட்டுதலோடும் சிறப்பு மிக்க மாவட்டமாக நாம் உருவாக்கிடுவோம்.

அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றிடுவோம் எனவே இந்த சிறப்பு வாய்ந்த விழாவிலே நல்லாசிரியர் விருது பெற்று பாராட்டுக்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும். அதேபோல 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர் பெருமக்களுக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்த நிகழ்வின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சொல்லி இந்த நடைபெறுகின்ற நிகழ்வு என்பது ஏதோ ஓராண்டுக்கு மட்டுமல்ல

நிச்சயமாக உங்களோடு நான் பணியாற்றக்கூடிய வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்வாறு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 7 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய 1185 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள். 129 தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாணாக்கர்களை பங்கேற்க செய்த உடற்கல்வி ஆசியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள், மாவட்ட – மாநில அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற 619 மாணாக்கர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் தலா ரூ.5.000 ரொக்கம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் மொத்தம் 2046 ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு ரூ.30.95 இலட்சம் மதிப்பீட்டில் பரிசுகளை மரியாதைக்குரிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார்.

மதியம் 2.45 க்கு விழா மேடை ஏறிய VSB .. இரவு 7.45 மணிக்கு மாணவர் – ஆசிரியர் என அனைத்து தரப்பினருக்கும் பரிசு, கேடயம் வழங்கி விட்டு மேடையில் இருந்து இறங்கினார்…

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை). இளங்கோ (அரவக்குறிச்சி),சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்),
கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)செல்வமணி, மண்டலக் குழுத் தலைவர் சக்திவேல், பள்ளி ஆசிரியர்கள். மாணவ மாணவிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!