உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு. முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
- சிகி தாமஸ் வைதியன் ஐஏஎஸ் பேரழிவு மேலாண்மை ஆணையர்
- சமயமூர்த்தி ஐஏஎஸ் மனித வள மேலாண்மை துறை செயலாளர்
- எம்.எஸ் .சண்முகம் ஐஏஎஸ்- முதல்வரின் தனி செயலாளர்-2
- ரீத்தா ஹரிஷ் தாக்கர் -ஐஏஎஸ் பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர்
- ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் -சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

