திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெயஸ்ரீ காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தனது குடிசை அருகே தங்கியிருந்த வேலூர் தம்பதியையும் காணவில்லை என்பதால் சுசித்ராவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

