கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளயம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 60 நபர்களை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து அந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்3 நபர்கள் அவர்களிடம் இருந்து 32 மது பாட்டில்களும், அதேபோன்று பேரூரில் 10 நபர்களை
பிடித்து 236 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள், கருமத்தம்பட்டி பகுதியில் 12 நபர்களை கைது செய்து 742 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதேபோன்று பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 177 மது பாட்டில்கள் பறிமுதல் அதேபோன்று வால்பாறையில் 10 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 477 மது பாட்டில்கள் மற்றும் 19 லிட்டர் கள் மற்றும் மேட்டுப்பாளைத்தில் 9 நபர்களை கைது செய்து 189 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் தயவு செய்து உள்ளனர்.
இதேபோன்று கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 11 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 136 மது பாட்டில்கள் மற்றும் 50 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 60 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.