Skip to content

சிறுமியை பலாத்காரம் செய்த 61வயது முதியவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், 13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 61 வயது முதியவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 61 வயது நபர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

error: Content is protected !!