Skip to content

7மாடியில் மயிலாடுதுறை ஜி.ஹெச். …… கலெக்டர் மகாபாரதி தகவல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2வது மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மகாபாரதி மயிலாடுதுறை பேருந்துநிலையத்தை ஆய்வு செய்தார். பின் நகரின் பலபகுதிகளில் தூய்மை பணியையும், குப்பை கொட்டுவதையும் பார்வையிட்டார். பின், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில், நோயாளிகள் சிகிச்சை பெறுவதையும், சிகிச்சை வழங்குவதையும் பார்வையிட்டார். பின். பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு இயந்திரம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும், இன்று மயிலாடுதுறைபேருந்துநிலையம், அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தேன். செல்லும் வழியில் பல இடங்கள் குப்பைகளாக உள்ளன. தூய்மைப் பணிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படாமல் உள்ளன. விரைவில் தூய்மை பணியாளர் உள்ள திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்பட்டு நோய் தொற்று இல்லா நகரமாக உருவாக்கப்படும்,
பாதாள சாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கபடும் , மருத்துவமனையில்,  7 மாடியில் புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்பிறகு இருதய நோய்க்கான சிகிச்சை திறன்பட நடைபெறும்.  மருத்துவர்களின் காலிபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறினார்.  கலெக்டர் மகாபாரதியுடன்  கோட்டாச்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி,மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!