திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நேற்று காலை திருச்சி பொன்மலை சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அந்த பெண்ணின் இரு சக்கர வாகனம் அருகே மர்ம ஆசாமி மோதுவது போல் வந்து நின்றார்.இதனால் நிலை தடுமாறி அந்த பெண் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது திடீரென்று எதிர்பார்க்காத நிலையில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து விட்டார்.இந்த சம்பவம் பொன்மலை காவல் நிலைய பகுதியில் நடந்தது -இந்த சாலையில் இவர்களை பின் தொடர்ந்து வந்த மற்றொரு நபர் ஒருவர் மர்ம ஆசாமியை பிடிக்க அவரை பின் தொடர்ந்து வேகமாக சென்று உள்ளார்,ஆனால் மர்ம ஆசாமியை பிடிக்க முடியவில்லை இந்த சம்பவத்தில் அந்தப் பெண் லேசான காயமடைந்தார். இது குறித்து பொன்மலை போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து 7 பவுன் நகையை தேடி சென்ற மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்
- by Authour
