கோவையில் மூதாட்டி (70) பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததனால் படிக்க ஆரம்பித்தார். முதல் முறை தேர்வு எழுதும் பொழுதே 600 க்கு 346 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் தமிழ் பாடத்தில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே படித்து தேர்வுக்கு தயாராகி பொது தேர்வு எழுதியுள்ளார். யோகா இளங்கலை மற்றும் நேச்சுரோபதி படிக்க
விருப்பப்படுகிறார். கோவை, கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சார்ந்த இவர் கணவர் மூன்றாண்டுக்கு முன் காலமானார். குடும்பத்தாரிடம் தன் ஆசையை தெரிவிக்கவே, நண்பர்கள் குடும்பத்தார் ஊக்குவிக்க இவர் படித்து பனிரெண்டாம் வகுப்பில் வென்றார்.