திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது

அவ்வழியாக வந்த டாட்டா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 75 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொபாவளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சிவாஜி ராஜா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .வாகன சோதனையின் போது குட்காவை பறிமுதல் செய்த கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெகுவாக பாராட்டியுள்ளார்.

