ஆந்திர மாநிலம் அன்னமய்யா ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது லாரியில் 18 கூலி தொழிலாளர்கள் இருந்த நிலையில் லாரி லோடுடன் தொழிலாளர்கள் மீது விழுந்ததால் அதில் சிக்கி 8 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மீட்பு காயமடைந்தவர்கள் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்கள் ரயில்வே கோடூர் மண்டலத்தில் உள்ள ஷெட்டிகுண்டா கிராமத்தைச் கூலி தொழிலாளர்கள் என்பதும் இவர்கள் மாம்பழங்களை பறிக்கும் பணியில் ஈடுப்பட்டு அதே லாரியில் பயணம் செய்து வந்தவர்கள் என போலீசார் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சாலை விபத்து குறித்து அறிந்த அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி மாவட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர் இறந்தவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்பது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.