Skip to content

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும்.

உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும்.

உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

சங்கராபுரம் மக்களுக்காக புதுபாலப்பட்டில் ரூ.18.50 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் கட்டடம் கட்டப்படும்.

திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் நலனுக்காக அரியூர் பகுதியில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

கல்வராயன் மலைப்பகுதி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணம் விரிவுபடுத்தப்படும்.

புதியதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும்-கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

error: Content is protected !!