நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.
இதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் சக மாணவன் மற்றும் ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் சீர்திருத்த குழுமத்தில் அடைத்தனர்.