கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் பகுதியில் சட்ட விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆனந்தகுமார்(47) செந்தில்குமார் (40) முகமது யூசுப் (21) மற்றும் கார்த்திக் (21) ஆகிய நான்கு பேரை மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டனர் .
அதன் அடிப்படையில் ஆனந்தகுமார் (47), செந்தில் குமார் (40), முகமது யூசுப் (21) மற்றும் கார்த்திக் (21) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக 43 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்