Skip to content

ETamail news செய்தி எதிரொலி….. மேயர் அன்பழகன் அதிரடி ஆய்வு…. மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி 19வது ,வார்டு பெரியகடை வீதி, கள்ளர்தெரு, பீரங்கிகுளம் உள் ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதாக  நேற்று  இ தமிழ் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இதை அறிந்த மாநகராட்சி மேயர் அன்பழகன் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.  அதைத்தொடர்ந்து இன்று  மேயர் மு. அன்பழகன்  மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன்  பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நேரில் ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்யவும் ,குடிநீரின் குளோரின் அளவை அதிகரிக்கவும், குடிநீரை ஆய்வு செய்யவும் இது போன்ற பொதுமக்கள் புகார்களை உடனடியாக ஆய்வு செய்யவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், நகர்நல அலுவலர் தலைமை யிலான சுகாதாரத் அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.  அப்போது  சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட் டதும் தெரியவந்தது.குடிநீர் காரணமாக இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதா என்று குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கள்ளர்தெரு, தேவர் பூங்கா, மேலபுலிவார்டு ரோடு, பீரங்கிகுளம், சிலோன்காரத்தெரு, பெரியக்கடைவீதி ஆகிய இடங்க ளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதி

பொதுமக்களுக்கு  மருத்துவ பரிசோத னைகள் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் .பி. சிவபாதம், செயற்பொறியாளர்கள் .கே.எஸ். பாலசுப்ரமணியன்,  மா.செல்வராஜ், உதவி ஆணையர்  சாலைத் தளவாளன் மற்றும் உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!