சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது வெடித்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காளிராஜன் (52) உயிரிழந்தார். சிவகாசியில் தீபாவளி தினத்தன்று இருசக்கர வாகனத்தில் காளிராஜன் பட்டாசு கொண்டு சென்றுள்ளார். பொதுமக்கள் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது பட்டதில் பட்டாசு வெடித்தது. பட்டாசு வெடித்ததில் பலத்த காயமடைந்த காளிராஜன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
