Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 73 காலி

பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு என மொத்தம் 4 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான நேர்முக தேர்வு கரூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலையில் 400 பேருக்கும், பிற்பகல் 400 பேருக்கும் என்று நேர்முக தேர்வு நடத்த அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கேற்ப தேர்வு நடைபெறுகிறது. கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்த்தல் பணியில் 16 போர்டுகளும் மற்றும் நேர்முகத் தேர்வில் 16 போர்டுகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!