Skip to content

பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக சில்லி கொம்பன் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஆழியார் வால்பாறை சாலையில் உலாவரும் இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
காலை மற்றும் மாலை வேலைகளில் மட்டுமே நவமலை, ஆழியார், வால்பாறை சாலைகளில் உலா வந்த யானை தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இந்நிலையில் இன்று காலை சின்னார் பாதி அருகே வால்பாறை சாலையில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றைக்காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் வனத்துறை மூலம் சுழற்சி முறையில் யானையை கண்காணிக்கும் படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் வனத்துறையினருக்கே போக்கு காட்டி அவ்வப்போது சாலையில் பகலில் நடமாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!