Skip to content

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை சேர்ந்த மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் காளான் பறித்து கொண்டிருந்த போது சுட்டு கொலை செய்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு

செய்து விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா குற்றவாளி பால்ராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளி 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!