Skip to content

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது:

கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.   பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும்  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்படும்.  டிஸ்மிஸ்  செய்யப்படுவார்கள்.

இதுபோன்ற  சம்பவங்களில் மாணவிகள்  பயமின்றி புகாா் அளிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!