Skip to content

கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர் பானம், மோர் உள்ளிட்டவைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து

வரும் நிலையில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, வெங்கமேடு, தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள், மோர்,தண்ணீர் உள்ளிட்டவர்களை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!