Skip to content

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான்.  அவனை போலீசார் தேடி வந்தனர். கடலூர் மாவட்டம் எம்.புதூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு திருப்பாதிரிபுலியூர் போலீசார் சென்று  விஜயை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸ்காரர் கோபியை தாக்கிவிட்டு விஜய் தப்பி ஓடினான்.   அப்போது அவனை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதில் விஜய் அந்த இடத்திலேயே இறந்தான்.

error: Content is protected !!