கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனப்பகுதியில் ஏராளமான நாட்டு குரங்கு உள்ளன தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் இடமாற்றம் செய்து ஆழியார் சோதனை சாவடி விட்டு வெளியே வந்து பகுதியில் உள்ள வீடுகளில் உணவு தேடி அலைகிறது குரங்குகள் பாதுகாக்கும் விதமாக வனத்துறையினர் வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பியும் பாதுகாத்து வருகின்றனர் இந்நிலையில் வனப்பகுதி விட்டு வெளியேறிய இரண்டு குரங்குகள் புதிய மார்க்கெட் பழைய பேருந்து நிலையம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதிகளில் நடமாட்டம் அதிகம் இருந்து வந்துள்ளது தற்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பழம் பறித்து அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அருந்தி உலா வருகிறது அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் குரங்குகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் .
பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்
- by Authour
