Skip to content

மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்”… அமைச்சர் மகேஷ்..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, மாதவிடாய் ‘தீட்டு’ எனக்கூறி அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ச்

பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியிடம், கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் விசாரிக்கவும் ஆணையிட்டுள்ளார். முன்னதாக பள்ளியின் முதல்வர் ஆனந்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!