அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்துசேர்வாமடத்தில் வசிக்கும், மொச்சக்கொட்டை என்பவரின் மகன் ஜோதி 45/25 என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 24.02.2025-ம் தேதி அதிகாலை ஏறவாங்குடியில் ஒரு வீட்டில் புகுந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, மீன்சுருட்டி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை அடிப்படையில், ஜோதி
கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோதியின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், ஜோதி வெளியே வந்தால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், ஜோதியின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசமி, ஜோதி
மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் இன்று 05.05.2025-ந் தேதி ஜோதி
குண்டர் என குண்டர் தடுப்பு சட்டத்தின் படி சிறையில் அடைக்க அதற்கான ஆணை பிரதியை மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
