ராஜஸ்தான் மாநிலம் வில்வாடா மாவட்டத்தை சொந்தமாக உடைய பாரஸ்மலின் மகன் ஆசாத் லோடா (46) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அரியலூர் மார்க்கெட் தெருவில் ஸ்ரீ அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற அடகு கடையை நடத்தி வருகிறார். மேற்கண்ட கடை சிறிதாகவும் போதிய பாதுகாப்பும் இல்லாததால் ஆசாத் லோடா, சுப்பிரமணியர் கோவில் அருகில், தனது தங்கை வீட்டுக்காரர் நடத்தி வரும் நானேஸ் பேங்கர்ஸ் நகை அடகு
கடையில், பாதுகாப்பாக வைப்பது வழக்கம். இந்நிலையில் ஆசாத் லோடா கடையில் வேலை பார்க்கும் ராஜஸ்தான் மாநிலம் கோபால் தாஸ் என்பவரின் மகன் கணையா லால், கடந்த 03/05/25 அன்று மாலை 6 மணி அளவில் சிவன் கடையிலிருந்து நகையை பாதுகாப்பாக வைக்க, நானே கடைக்கு சென்று, நகையை வைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க கணையாலால் வராததால், ஆசாத் லோடா போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் என வந்ததால், அரியலூர்
(நகைக்கடை உரிமையாளர்)
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் கணையாலால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஆசாத் லோடாவிடம் பணிக்கு சேர்ந்ததாகவும், முழு வரவு செலவையும் கணையாலால் பார்த்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் தனது கடையிலிருந்து அடகு வைத்த நகை ஒரு கிலோ தனது சொந்த நகையை அரை கிலோ சேர்த்து ஒன்னரை கிலோ தங்க நகைகள், எட்டரை கிலோ வெள்ளி நகைகள், ஐந்து லட்சம் பணம் ஆகியவற்றை கணையாலால் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். அரியலூர் போலீசார் இத்திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்கு வேலைக்கு வைத்திருந்த பணியாளரே கோடிக்கணக்கில் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.