Skip to content

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில்  பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி  தனது X  தளத்தில் வாழ்த்தும் , பாராட்டும்  தெரிவித்து  உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட அளவில் , ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி செல்வி கே.வர்ஷா 595 மார்க் பெற்று முதலிடம் பெற்றார்.    பரணி பார்க் பள்ளி மாணவி செல்வி வி.தனஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார். பரணி பார்க் பள்ளி மாணவ செல்வங்கள் கே.ஜெயஸ்ரீ மற்றும் எஸ்.தரணி  ஆகியோர் தலா 591 மார்க் பெற்ற  மூன்றாம் இடத்தை பகிர்ந்து உள்ளனர். கரூர் மாவட்டத்தில்  பிளஸ்2 தேர்வில் சாதனை புரிந்த மேற்கண்ட மாணவ, மாணவிகளுக்கு எனது அன்பையும், மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.  
error: Content is protected !!