கோவை ரயில் நிலையத்தில் 9 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு – தலையில் கவரில் சிக்கிக் கொண்டு தவிப்பு – சிறிது நேரத்தில் போராட்டத்திற்கு பின் தானாக மீண்டு சென்றது செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்..!
கோவை மாநகரின் முக்கிய பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது.
இங்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள், அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடையில் உள்ள தாமஸ் கிளப் வழியாக ரயில் நிலையம் முதலாவது பிளாட்பார்ம் செல்வதற்கான பாதையில் இன்று பிற்பகல் சுமார் 9 அடி நீளமுள்ள நாகப் பாம்பு அங்கு சென்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்தப் பாம்பு ஊர்ந்து செல்லும் போது வழியில் இருந்த பிளாஸ்டிக் கவரில் தலை சிக்கிக் கொண்டது. செய்வது அறியாது தவித்து வந்த அந்த பாம்பு பின்னர் சிறிது நேரம் கழித்து லாபகமாக பிளாஸ்டிக் கவரில் இருந்து தலையை வெளியே எடுத்து அதில் இருந்து மீண்டு சென்றது. அந்தக் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலையை மாட்டிக் கொண்டு பரிதவித்த பாம்பு சிறிது நேரத்தில் தானாக அதில் இருந்து தப்பிச் சென்ற காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது..!