இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 13 இந்தியர்கள் பலியானார்கள். 59 பேர் பலத்த காயமடைந்தனர். ஆபரேசன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
அடுத்ததாக பாகிஸ்தானும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் மீது ஏவுகணை வீசியது. இதை வானிலேயே இடைமறிந்தது இந்தியா அழித்தது.