தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு மாதிரி பள்ளி புதிய கட்டடத்திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
2021 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பத்து மாவட்டங்களில் திறப்பதாக முடிவு செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செந்தண்ணீர்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலும், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்களின் முன்னிலையிலும், பள்ளிக் கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் மூலமாக முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளி துவக்கிவைக்கப்பட்டது.
இந்த மாதிரி பள்ளியானது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி நிலத்தில் 3.20 ஹெக்டேர் நிலத்தில் ரூ. 56.47 மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் 22 வகுப்பறைகள். வேதியியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம், பல்நோக்கு அறை, உயிரியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம், முதல் உதவி மற்றும் விளையாட்டு அறை 1, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள் 3 அலுவலக அறை, பெண்கள் மற்றும் ஆண்கள் ஓய்வறை, பெண்கள் மற்றும் ஆண்கள் மாற்றுத்திறனாளி அறைகள் 6, RO குடிநீர் வசதிகள், 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தரை தண்ணீர் தொட்டிகள். தடையற்ற மின் வழங்கல், உயர் மட்ட விளக்கு போன்ற வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த புதிய கட்டடத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து பள்ளியை சுற்றி பார்த்தார். பின்னர் மாணவர்களுடன் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி ,திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்பிக்கள் அருண் நேரு, துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்