சென்னை தியாகராய நகர் வர்த்தகம் நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு கடைகள் என அனைத்து வகை கடைகளும் உள்ளன. இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும் கூட்டம் நிரமபி வழியும். இந்த நிலையில் இன்று காலை ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தீவிபத்து ஏற்பட்ட புகையால் அந்த தெருவே புகை மண்டலத்தில் மூழ்கியது.
அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீயணைக்கும்படை வீரர்களும் வந்து போராடி தீயை அணைத்து வருகிறார்கள்.
