Skip to content

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு சென்று வர இங்கு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்கள் மீது எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியுள்ளது. இதில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!